தமிழ்நாடு

Theni | பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு..பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்த நபர்கள்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு..பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்த நபர்கள்

thanthitv

#theni #thanthitv தேனி மாவட்டம் கம்பத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூலத்தவர் முக்கு தெருவைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ்குமாருக்கும், அவரது நண்பரான சுகீருக்கும் இடையே பணம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மதுபானக் கடை பகுதியில் சந்தோஷ்குமாருக்கும், சுகீர் உள்ளிட்ட 3 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் வீட்டிற்கு நடந்து சென்ற சந்தோஷ்குமாரை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பீர் பாட்டிலை உடைத்து, சந்தோஷ்குமாரை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுகீர் மற்றும் கண்ணன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Rains | தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை | வந்தது அலர்ட்

CM VIjay Dharapuram Campaign | நாளை தாராபுரம் வரும் CM விஜய்..இன்றே ஸ்பாட்டில் இறங்கிய அமைச்சர்கள்

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

Mumbai | சிப்ஸ், மிக்சருக்குள் வைத்து ரூ.37 கோடி போதைப்பொருள் கடத்தல்..தட்டி தூக்கிய போலீஸ்

Breaking | TN Govt | தனியாருடன் கைகோர்க்கும் அரசு | நாகர்கோவில், மதுரையில் மாஸ்டர் பிளான்