தமிழ்நாடு

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்,மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போடி அருகே உள்ளஷ கோடாங்கிபட்டி என்ற இடத்தில் நிகழ்ந்தது. தனுஷ்கோடி என்பவரின் 27 வயது மகன் கண்ணன் என்பவர், தனது மனைவி மகாலட்சுமிக்கு தனது வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர், தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியும் கேட்க மறுத்து, கண்ணன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆபத்தை உணர்ந்த மருத்துவக்குழுவினர், உடனடியாக ஆம்புலன்ஸ்களை வரவழைத்து, தயார் நிலையில் வைத்தனர். பல மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் கண்ணன் சம்மதம் தெரிவித்ததால், குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், மகனுக்கு உதவிய தந்தை தனுஷ்கோடி என்பவர் கைது செய்யப்பட்டார். யூ- டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த திருப்பூர் பெண் விவகாரம், கோவை - ஹீலர் பாஸ்கர் விவகாரம் என அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தேனி அருகே நிகழ்ந்த இந்த நிகழ்வு, மருத்துவ துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு