தமிழ்நாடு

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை

சுப நிகழ்ச்சிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை பறித்து செல்லும் கில்லாடி கொள்ளையன் - காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தையிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தந்தி டிவி
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணியாற்றிவரும் ச‌சிக்குமார். கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை மாயமானதை தொடர்ந்து அங்கிருந்த வீடியோ பதிவுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில் மர்ம நபர் ஒருவர் விளையாடி கொண்டிருந்த குழந்தையிடம் செயினை பறிப்பது பதிவாகியிருந்த‌தை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். இதில் செயினை பறித்து சென்றது வேலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த புருஷோத்தமனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த‌னர். அவரிடம் இருந்து 16 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. விசாரித்த‌தில் இதே போன்று சுப நிகழ்ச்சிகளில் விளையாடும் குழந்தைகளை குறிவைத்து திருடி வந்த‌து தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புருஷோத்தமன் மீது 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்