kanchipuram | theft1000 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் பகீர் மக்களே கொடுத்த Clue. தட்டி தூக்கிய போலீஸ் #kanchipuram #temple #theft #lakhs காஞ்சிபுரத்தில் கோவில் பணம் ரூ.68 லட்சம் கையாடல் - ஊழியர் கைது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வளையக்கரணையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் வங்கிக் கணக்கில் இருந்து 68 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கோவிலின் தற்காலிக ஊழியர் ஹரிகிருஷ்ணன், செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான புகாரில், ஒரகடம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.