திருமங்கலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மதுரை கரிசல்பட்டியை சேர்ந்த மதுக்கடை மேற்பார்வையாளர் செல்வம் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 10 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். போலீசார், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.