மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தேன் பிரபாகர் என்பவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.