தமிழ்நாடு

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் அஞ்சலை முகர்ஜி. இவரது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்த மர்ம கும்பல் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளைடியத்து சென்றது. இதேபோல் அடுத்தடுத்த 5 வீடுகளிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்பட்டது. ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம், நகைகள், பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில் காரில் வந்த கும்பல் ஒன்று இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்