தமிழ்நாடு

மனைவியுடன் பேசிய இளைஞர் - கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம் - மச்சானுடன் மாமன் போட்ட பிளான்

தந்தி டிவி

சின்னமனூர் அருகே சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில் கான். இவர், அலாவுதீன் என்பவரது மனைவியுடன் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அலாவுதீனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், அலாவுதீன் தனது மனைவியின் தம்பி முகமது சமிர் என்பவருடன் சேர்ந்து, காபில் கானை கண்டித்துள்ளார். எனினும், இருவரும் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த அலாவுதீன் மற்றும் முகமது சமிர் ஆகியோர் சேர்ந்து, காபில் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அலாவுதீன் தனது மனைவி மூலமாக காபில் கானை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, முகமது சமிருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து காபில் கானின் உறவினர் அளித்த புகாரின் பேரில் அலாவுதீன், அவரது மனைவி மற்றும் முகமது சமிர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்