விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அன்னியூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
வாக்குகள் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் என்றும் 19 ஆயிரத்து 722 தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.