தமிழ்நாடு

சேலத்தை நடுநடுங்க வைத்த மாந்திரீகர்..! ரத்த காவு வாங்கப்பட்ட உயிர் கிராமத்தை அலற வைத்த கும்பல்

தந்தி டிவி

சேலம் அருகே மாந்திரீகத்தில் யார் பெரியவர் ? என்பதில் ஏற்பட்ட தகராறில், மாந்திரீகர் ஒருவர் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம், மல்லூர் அருகேயுள்ள எரும நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜ். மாந்தரீகம் செய்யும் தொழில் செய்து வந்த இவருக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 26 ஆம் தேதி இரவு வாழக்குட்டப்பட்டி அருகே மர்மநபர்களால் முத்துராஜ் படுகொலை செய்யப்பட்டார். 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, அதே ஊரை சேர்ந்த மற்றொரு மாந்தரீகரான ஜெயக்குமார் என்பவருக்கும், முத்துராஜூக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. எரும நாயக்கன் பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் முத்துராஜின் சொற்படியே ஊர் மக்கள் நடந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெயக்குமாரும், முத்துராஜூம் அடிக்கடி மோதி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த முன்விரோதத்திலே ஜெயக்குமார் கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவர, ஜெயக்குமார் உட்பட வேங்கம்பட்டியை சேர்ந்த மூவரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?