Erode | Dam Crowd | ஒட்டுமொத்த ஈரோடும் இங்க தானோ.. | களைகட்டிய பவானிசாகர் அணை
ஆடிப்பெருக்கில் களைகட்டிய பவானிசாகர் அணை பூங்கா ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை பூங்காவிற்க்கு வருகை தந்தனர். பூங்காவில் படகில் சவாரி செய்தும், சிறுவர் ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களில் விளையாடியும் குழந்தைகள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்