தமிழ்நாடு

பையில் கிடைத்த பொக்கிஷம்.. திறந்து பார்த்த பொது பயங்கர ஷாக்! - நண்பரோடு வாயடைத்து நின்ற தருணம்

தந்தி டிவி

தருமபுரியில், காகிதம் நிரப்பிய பையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் டிராவல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பண இரட்டிப்பு தொடர்பாக செல்போனில் அடையாளம் தெரியாத இருவர் அறிமுகமாகினர். 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக 13 லட்சம் ரூபாயாக மாற்றி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இந்நிலையில், நல்லம்பள்ளி சந்தையில் இருசக்கர வாகனத்தில் வந்து 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு, ஒரு பையை கொடுத்து விட்டுச் சென்றனர்.

இதையடுத்து, சுரேஷும், அவரது நண்பர் ராஜேந்திரனும் பையை திறந்து பார்த்தபோது அதில் வெறும் பேப்பர் கட்டுகள் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..