டூட்டி முடிந்துவீடு திரும்பிய SSI-க்கு நேர்ந்த விபரீதம்.. ஒன்றும் புரியாமல் பார்த்து நின்ற மக்கள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டி வந்தவர் ஏற்படுத்திய விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகபிரியன் என்பவர் நேற்று இரவு மதுபோதையில், தன்னுடைய காரில் அதிக வேகத்தில் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பணி முடித்து வீடு திரும்பிய கெங்கவல்லி சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் மீது கார் மோதியுள்ளது. தொடர்ந்து, வேகம் குறையாத கார் அப்பகுதியில் இருந்த காய்கறி கடை செல்போன் கடையில் மோதி நின்றது. காருக்குள் இருந்த இளம் பெண்களை அப்பகுதியில் இருந்து அவர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் மற்றும் சதீஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் மோதியதில் 2 கைகளும் உடைந்த நிலையில், சதீஷ் ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிபோதையில் காரை ஓட்டி வந்த சண்முகப்ரியனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் சேலம் தம்மம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது