Vaigai Dam | Madurai | Theni | வைகை அணையில் அப்படியே தலைகீழான நிலவரம் #vaigaidam #madurai #theni #thanthitv வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 900 கன அடி நீர் திறப்பு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் நிர்மல் குமார், தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் 30 நாட்கள் தொடர்ச்சியாகவும், அடுத்த 70 நாட்கள் நீர் இருப்பைப் பொறுத்து முறை வைத்தும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5,357 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படுவதன் மூலம் 45,041 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.