தமிழ்நாடு

Gem Veeramani Issue Update| `ஜெம்’ வீரமணியின் அசரடிக்கும் பின்னணி - கோர முகத்தின் மறுபக்கம்

`ஜெம்’ வீரமணியின் அசரடிக்கும் பின்னணி - கோர முகத்தின் மறுபக்கம்

thanthitv

#gemveeramani #gemveeramaniissue #gemveeramanilatestupdate

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யார் இந்த ஜெம் வீரமணி என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது... ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட வீரமணி, சேலத்தில் கணிதம் மற்றும் புள்ளியியல் படித்துள்ளார். பின்னர் சட்டப்படிப்பு முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் வழக்கறிஞர் பணியை விட்டு, கிரானைட் தொழிலில் கவனம் செலுத்தியுள்ளார். 1970-களில் கிரானைட் குவாரி மற்றும் ஏற்றுமதி தொழிலில் பகுதி நேரமாக ஈடுபட்டவர், பின்னர் அதையே முழுநேரத் தொழிலாக மாற்றியுள்ளார். 1972ஆம் ஆண்டு ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியா முழுவதும் கிரானைட் கற்களை விநியோகம் செய்துள்ளார். தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நிறுவனத்தை வளர்த்துள்ளார். மேலும், இந்தியாவில் நவீன கிரானைட் குவாரி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய இவர், 1990-களில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக உருவாக்கியுள்ளார். கிராணைட் தொழிலில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சூழலில், அகில இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும், உலக இயற்கை கல் சங்கத்தின் தலைவராகவும் வீரமணி பதவி வகித்துள்ளார். இதுதவிர சர்க்கரை ஆலை, ஜவுளி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். இந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாரால் வீரமணி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Rain வங்க கடலில் தீவிரமாக உருமாறுகிறது - இப்ப கரெக்ட்டா எந்த லொகேஷன்ல இருக்கு தெரியுமா

Gem Veeramani Issue Update| யார் யாருக்கு பணம் செட்டில் செய்தார் `ஜெம்’ வீரமணி? - கிடைத்தது துப்பு

Dharapuram Vote தாராபுரத்தில் என் ஓட்டு யாருக்கு? ஒரு முடிவோடு ஓட்டுபோடும் 1,236 வாக்காளர்கள்

CM Vijay | 2வது நாளாக தீவிரம் காட்டும் முதல்வர் விஜய்

Gold Price Today | மாற்றத்தை காட்டிய தங்கம் விலை