#autodriver #autobooking பெண் ஆட்டோ ஓட்டுநரை ஆசைக்கு இணைங்க அழைத்த அதிர்ச்சி செங்கல்பட்டில், தமிழக அரசு மானியத்தில் ஆட்டோ வாங்குவதற்காக விண்ணப்பித்திருந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை ஆபாசமாக பேசி, ஆசைக்கு இணைங்க அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர், அரசு மானிய கடன் மூலம் ஆட்டோ வாங்க விண்ணப்பித்த நிலையில், தன்னை நலவாரிய அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட பாஸ்கர் என்பவர், ஆட்டோ வழங்க வேண்டும் என்றால் தனக்கு இணங்க வேண்டும் என மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஆபாச பேச்சு மற்றும் புகைப்படங்கள் அனுப்பி தொந்தரவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.