Tiruvarur | Fire Accident | தீப்பற்றி எரிந்த மாடி வீட்டின் கூரை | மளமளவென பரவிய காட்சி
#tiruvarur #fireaccident #fire #rescue #thanthitv
மாங்குடியில் மாடி வீட்டின் கூரையில் நள்ளிரவில் தீ விபத்து - பரபரப்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நள்ளிரவில் மாடி வீட்டின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி, கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.