சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார். ரெஜினா தனது கணவர், மகள், மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.