கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில், ரயில்வே துறைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜல்லிப்பட்டி அருகே ரயில்வே கேட்டை அடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, இந்த விபத்துக்கும் ரயில்வேக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்றும், வீரராக்கியம் முதல் பாளையம் வரை தனியார் சிமெண்ட் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்துக்காக சரக்கு ரயிலை இயக்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனம் இயக்கும் ரயில் பாதையில் பல இடங்களில் அபாயமான ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ளதாகவும் தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.