தமிழ்நாடு

Price Hike | கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி இவ்வளவா?

கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி இவ்வளவா?

thanthitv

Price Hike | கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி இவ்வளவா? #Jasmineflower #pricehike #thanthitv கடும் பனிப்பொழிவு மற்றும் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை திருநாள் எதிரொலியாக நெல்லையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நெல்லை சந்திப்பு மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேந்திப்பூ கிலோ 80 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை செவ்வந்தி மற்றும் அரளிப்பூ தலா 300 ரூபாய்க்கும், நந்தியாவட்டை 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வரவுள்ளதால், பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Elephants | Keralam | ரயில் மோதி பலியாகும் யானைகள்.. கேரளம் அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் சர்ச்சையான `அரோகரா’ - "பாடகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது.."

Chennai Highcourt உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரம் - ஐகோர்ட் வரை சென்ற வழக்கு

Gem Veeramani Case | Chennai High Court | ஜெம் வீரமணி ஓட்டுநர் ஜாமீன் மனு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

#BREAKING || TN Govt | "ரூ.4,000.." - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு