தமிழ்நாடு

அதிசயத்தின் உச்சம்.. 300 லிட்டர் தாய்ப்பால் - ஆசிய கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி பெண்

தந்தி டிவி

அதிசயத்தின் உச்சம்.. 300 லிட்டர் தாய்ப்பால் - ஆசிய கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி பெண்

300 லிட்டர் தாய்ப்பால் தானம் - பெண்மணி கௌரவிப்பு

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த திருமணமான பட்டதாரி பெண் ஒருவர், 300 லிட்டர் தாய்ப்பால் தானம்செய்த, ஆசியாவின் முதல் பெண்மணி என்ற பதக்கத்தை வென்றுள்ளார். காட்டூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர், செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணமாகி, பெண் குழந்தை பிறந்த போது, அதன் தேவைக்கு கூடுதலாக தாய்ப்பால் சுரந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தானம் செய்ய தொடங்கினார். அவ்வாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில், 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கியுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்