#hosur #rainfall #thanthitv
ஓசூர் மத்திகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால், குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்தது.சுற்றுச்சுவர் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன.மின்கம்பங்கள் சேதமடைந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர், குழாய்கள் மூலம் திறந்தவெளியில் விடப்பட்டதாகவும், அந்த கழிவுநீருடன் கனமழைநீர் சேர்ந்ததால் சுற்றுச்சுவர் வலுவிழந்து இடிந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிகழ்ந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.