தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, கடந்த ஆகஸ்ட் மாதம், தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றார். இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக மாநில தலைமை இன்றி பா.ஜ.க இயங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்தமாதம் ஐந்தாம் தேதி தமிழக பாஜகவின் புதிய தலைவர் தேர்வு குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடையே கருத்து கேட்க டெல்லியில் இருந்து பாஜகவின் பார்வையாளராக பொதுசெயலாளர் ஜெயபிரகாஷ் வருகை தர உள்ளார். அதன் பிறகு, சில தினங்களிலேயே தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேசிய தலைமை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.