தமிழ்நாடு

பெண் கவுன்சிலர் வீசிய வலை - சிக்கிய ஆண் கவுன்சிலர் - ரூ.2.50 கோடி.. மொத்தமும் அபேஸ்

தந்தி டிவி

ராசிபுரம் நகராட்சியில் 12-வது வார்டு சுயேட்சை பெண் கவுன்சிலராக இருக்கும் சசிரேகா மீது, மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளரும் கவுன்சிலருமான செல்லவேல், நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பழைய கார்களை பாதி விலைக்கு வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் சசிரேகா இரண்டரை கோடி ரூபாய் வாங்கி விட்டு மோசடி செய்ததாக செல்லவேல் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பெயரில், சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையினர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சசிரேகாவின் கணவர் சதீஷ்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகு சசிரேகா கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்