மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுக்குளம் பகுதியில் நடந்த காதணி விழாவில், 50 பவுன் நகைகள், 22 லட்சம் ரூபாய் மொய்ப் பணத்துடன் 3 தாய்மாமன்கள் கரகாட்டம், கதகளி, ஒயிலாட்டம் என ஊர்வலமாக சென்று அசத்தினர். விக்னேஷ் - ரம்யா தம்பதியின் 2 பிள்ளைகளின் காதணி விழாவானது, முத்துப்பட்டி பகுதியில் செண்டை உள்ளிட்ட மேளதாளத்துடன் அமர்க்களமாக நடைபெற்றது.