தமிழ்நாடு

உறங்காமல் புலம்பிய கொலையாளி சதீஷ்.. 24 மணி நேரமும் கண்காணிக்கும் போலீஸ்

தந்தி டிவி

உறங்காமல் புலம்பிய கொலையாளி சதீஷ்.. 24 மணி நேரமும் கண்காணிக்கும் போலீஸ்

சென்னையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சதீஷ்க்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப்பிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சதீஷ் இரவு முழுவதும் உறங்காமல் புலம்பி கொண்டு இருந்ததாகவும், ஏற்கனவே தானும் தற்கொலை செய்ய நினைத்தாக வாக்குமூலம் அளித்து இருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளி சதீஷை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

அவரை கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சதீஷ்க்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை