பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிந்த மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துறைமுகம் அருகே சங்கக்கார தெருவை சேர்ந்த பூங்கொடி, தனது மகள் மீனா உடன் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மீனாவின் கணவர் நம்புராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்று தப்பியோடினார். பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.