தமிழ்நாடு

இசைக்கலைஞரின் வீடு எரிந்து முற்றிலுமாக உருக்குலைந்த கொடூரம்

தந்தி டிவி

சேலம் பகுதியில் இசைக்கலைஞர் ஒருவரது வீடு மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர்கள் முருகன், பட்டு தம்பதி. முருகன் இசை கலைஞராக உள்ள நிலையில், பட்டு கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். வீட்டின் உள்ளே கியாஸ் சிலிண்டர் இருந்த நிலையில், நல் வாய்ப்பாக அசாம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக அது மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த டிவி, உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், இசை பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

CM Vijay | Govt Employees| 30% சம்பளம் + 60% DA.. அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

Hormuz Strait | Donald Trump | Iran US War | "இனி தடை இல்லை..." - அதிரடியாக மாறப்போகும் ஹார்முஸ்

Iran US War | முடிவுக்கு வந்த ஈரான் - அமெரிக்கா போர் - கையெழுத்து போட்ட இருநாட்டு அதிபர்கள்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை