பவானி அருகே நடந்த சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அலங்காரியூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற கட்டிட தொழிலாளி, தனது இருசக்கர வாகனத்தில் சித்தார் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தொப்பூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே அவர் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி பாஸ்கர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.