தமிழ்நாடு

பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, உணவு துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திருவாரூர் சன்னதி தெரு பகுதியில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டபோது, அருள்ஜோதி என்ற பெண், வீடுகளை இழந்து பள்ளிகளில் தங்கியுள்ளதாகவும், இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறி கதறி அழுதார். அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய ஆளுநர், அனைத்து நிவாரண உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, மன்னார்குடி அருகே காத்தாங்குளம் என்ற கிராமத்தில், புயலால் சாய்ந்த உயர்மின் அழுத்த கோபுரம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்