தமிழ்நாடு

கொரோனோ டைமில் ஒரே போட்டாவால் பேமஸான வேலம்மாள் பாட்டி காலமானார்.. அந்த வெள்ளந்தி சிரிப்ப மறக்க முடியுமா?

தந்தி டிவி

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியை, கையில் ஏந்தி கவனம் ஈர்த்த வேலம்மாள் பாட்டி, காலமானார். இரண்டாயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்புடன், பற்கள் இல்லாத வாயுடன் மகிழ்ச்சியாக சிரித்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படம், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதை முதல்வர் ஸ்டாலினும் பகிர்ந்த நிலையில், வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீடும் வழங்கப்பட்டது. இந்நிலையில் வயதுமுதிர்வு காரணமாக, வேலம்மாள் பாட்டி 87 வயதில் உயிரிழந்துள்ளார், இதனிடையே இவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை