தமிழ்நாடு

கடன் பிரச்சினையால் விபரீத முடிவெடுத்த குடும்பம் - குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கடன் பிரச்சினையால் விபரீத முடிவெடுத்த குடும்பம் - குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தந்தி டிவி

கடன் பிரச்சினையால் விபரீத முடிவெடுத்த குடும்பம் - குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி

நாமக்கல் அருகே கடன் பிரச்சினையால் குடும்பமே விஷம் குடித்ததில் மனைவியும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, சேடர் தெருவை சேர்ந்தவர் சையது அக்பர். இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு சிக்கந்தர் பாஷா மற்றும் பர்கத் என 2 மகன்கள். இதில் முதல் மகனுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வரும் நிலையில் 2வது மகனான பர்கத் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். இதனிடையே இவர்களுக்கு கடன் பிரச்சினை உள்ளதாக கூறப்படும் நிலையில் குடும்பமே மனவிரக்தியில் இருந்துள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த 3 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தனர். உடனடியாக உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாத்திமா மற்றும் அவரின் மகன் பர்கத் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் சையத் அக்பர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி