தமிழ்நாடு

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தந்தி டிவி

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில், சிஐஐ தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசின் எல்காட் சார்பில் 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தரவு மையங்களில் முதலீடு செய்வதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், ஆயிரத்து 996ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சி செய்தது என்று பெருமிதம் கொண்டார். அரசின் புதிய கொள்கைகள், முன் முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில் நுட்ப மையமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்