ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொ* போலீஸ் பிடியில் சிக்கிய கொடூரன்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்சனை தொடர்பான தகராறில், கண்ணநல்லூர் ஊராட்சி தலைவர் மகாராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். தாமரைகுளத்தை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் போலீசார், தப்பியோடிய இசக்கிபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.