தமிழ்நாடு

இருவரது உடல்களில் இருந்த காயங்களே இறப்புக்கு காரணம்... உடற்கூறாய்வில் உறுதி

தந்தி டிவி

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான எய்ம்ஸ் மருத்துவர், இருவரது உடல்களில் இருந்த காயங்கள் தான் அவர்களின் இறப்புக்கு காரணம் என்பதை தாங்கள் உறுதிப்படுத்தியதாக சாட்சியமளித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பான இரட்டை கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகி எய்ம்ஸ் மருத்துவர் அரவிந்த்குமார் விளக்கமளித்தார். அதில், அரசு மருத்துவர்கள் அளித்த உடற்கூராய்வு அறிக்கையில் இருவரது உடல்களில் இருந்த காயங்களே அவர்களது இறப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை தங்கள் குழு உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி