தமிழ்நாடு

பண்ணை குட்டையில் மூழ்கிய சிறுவன்...மாவட்ட ஆட்சியரின் இறுதி முடிவு என்ன..?

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, 3 பண்ணைக்குட்டைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சுண்ணாம்பு பள்ளத்தைச் சேர்ந்த நந்தகுமார் - ரேவதி தம்பதியினரின் 4 வயது மகன் கோகுல், அருகிலிருந்த பண்ணைகுட்டையில் மூழ்கி உயிரிழந்தான். குடியிருப்பு பகுதி என்பதால் பண்ணை குட்டை அமைக்க வேண்டாம் என கேட்டும், அதனை மீறி 8 அடி ஆழத்தில் குட்டை வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழப்பை தொடர்ந்து குட்டைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், சிறுவன் மூழ்கிய பண்ணை குட்டை உட்பட 3 குட்டைகளை மூட உத்தரவிட்டார்.   

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்