தமிழ்நாடு

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தந்தி டிவி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைசெவலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது தோட்டத்தில் இறுதிசடங்கு நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 14 ஆயுதபடை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்தனர். இதையடுத்து குடும்ப வழக்கம், சம்பிரதாயப்படி கி.ராஜநாராயணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்