வீட்டின் முன் நின்ற ஆட்டோ.. சொந்த வாகனம் போல் சைலண்டாக தூக்கிய இளைஞர்கள் #chengalpattu #theft #auto #crime #cctv #police #thanthitv செங்கல்பட்டு அருகே ஆட்டோவை திருடிச் சென்ற மர்மநபர்கள் செங்கல்பட்டு அருகே திம்மாவரம் திடீர் நகர் பகுதியில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை மூன்று மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ உரிமையாளர் சிவா, வழக்கம்போல் சவாரி முடிந்து வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு உறங்கியுள்ளார். காலை ஆட்டோ காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆய்வு செய்த சிசிடிவி காட்சிகளில், மூன்று இளைஞர்கள் நோட்டமிட்டு, ஆட்டோவைத் தள்ளிச் சென்று திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகளை கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.