தமிழ்நாடு

கண்களில் மிளகாய் பொடியை தூவி ரூ.60 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள்

தந்தி டிவி

திருப்பத்தூர் நகர் பகுதியில் கவுசிக் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில், அஜித்குமார் மற்றும் பரத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நகைக் கடையில் விற்பனையான பணம் 60 லட்சம் ரூபாய் பணத்தை, வங்கியில் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் ஒன்று, அவர்களை பின் தொடர்ந்து சென்றது. கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் வழிமறித்த கும்பல், அஜித் குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை பறிக்க முயன்றது. அதற்குள் சுதாரித்துக் கொண்ட இருவரும் சமாளிக்கவே, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழிப்பறியில் ஈடுபட முயன்ற பிரபாகரன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்