#Kovai #ImageMorphing #AI #AIMorphing #Crime #TNPolice #ThanthiTV Kovai | Image Morphing | பெண் உறவினர்கள் போட்டோக்களை வைத்து.. முகம் சுளிக்க வைக்கும் இளைஞரின் செயல் கோவையில் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் பெண் உறவினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சேரன்மாநகரைச் சேர்ந்த ஆக்டிங் டிரைவர் கிஷோர் என்பவர், கடந்த வாரம் நடைபெற்ற உறவினர் திருமணத்தின்போது பெண் உறவினர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்களையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்களையும் தரவிறக்கம் செய்து, சேட் ஜிபிடி மற்றும் ஜெமினி ஏ.ஐ செயலிகள் மூலம் அந்தப் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் சேமித்து வைத்துள்ளார்.இதனைத் தற்செயலாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கிஷோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.