தமிழ்நாடு

ஏழை கனவுகளுக்கு கைகொடுத்த RTE "- இப்ப எங்க குழந்தைகளும் இங்க படிப்பாங்க" - நெகிழ்ச்சியில் பெற்றோர்

தந்தி டிவி

ஏழை கனவுகளுக்கு கைகொடுத்த RTE

"இப்ப எங்க குழந்தைகளும் இங்க படிப்பாங்க"

நெகிழ்ச்சியில் பெற்றோர்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009ன்படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் பள்ளிகளிலும், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் இடங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் குலுக்கல் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதன்படி, சென்னையில் உள்ள 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த மாணவர் சேர்க்கை மூலம், நெருக்கடியான பொருளாதார சூழலிலும், தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி பெற முடிவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

TN Assembly | OPS - KAS மாறி மாறி வார்த்தை மோதல் - அனல் பறக்கும் சட்டப்பேரவை

Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் - வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்

Chennai | Flight | தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள் சென்னையில் பரபரப்பு

Kaveri River | காவிரி விவகாரம்..நாளை அவசர கூட்டம்

Breaking | Jharkhand Protest | மீண்டும் வெடித்த ஜென்Z போராட்டம் | அதிரடியில் இறங்கிய போலீசார்