தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தை பதறவிட்ட பெண் பெயரில் வந்த மிரட்டல்... விசாரணையில் திடுக் தகவல்

தந்தி டிவி

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு பெண்ணின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிட்டு குறுந்தகவல் மூலம் வாடிக்கையாளர் மையத்திற்கு மிரட்டல் வந்தது. விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது. தொடர்ந்து செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது, பெரம்பூரைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண் என்பதும், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் அவரை சிக்க வைக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குறுந்தகவலை அனுப்பிய ஐ.பி முகவரி அடிப்படையில் பிரசன்னா என்ற இளைஞரை தஞ்சை மாவட்டம் திருவையாறில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பூரில் தான் படித்தபோது அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் பழிவாங்கும் விதமாக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்