தமிழ்நாடு

பைக்கில் உட்கார்ந்தபடியே பிரிந்த நண்பன் உயிர்...இரக்கமே இல்லாமல் நடுரோட்டில் இளைஞர்கள் செய்த கொடூரம்

தந்தி டிவி

பைக்கில் உட்கார்ந்தபடியே பிரிந்த நண்பன் உயிர்...இரக்கமே இல்லாமல் நடுரோட்டில் இளைஞர்கள் செய்த கொடூரம்

சேலத்தில் கஞ்சா போதையில் இறந்த இளைஞரின் உடலை, சாலையோரம் போட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் S.கொல்லப்பட்டி அருகே குரங்கு சாவடி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், மயக்க நிலையில் இருந்த ஒருவரை இறக்கிவிட்டு செல்ல முயன்றனர். அங்கிருந்த பொதுமக்கள், 2 பேரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மயக்க நிலையில் இருந்த இளைஞர் உயிரிழந்திருப்பது தெரிய வந்த‌து. விசாரணையில், இறந்தவர் S. கொல்லப்பட்டியை சேர்ந்த அருண் என்பதும், பிடிபட்ட நபர்கள் தளவாய்பட்டி சேர்ந்த பூவரசன் மற்றும், ஓம் சக்தி நகரைச் சார்ந்த கௌதம் என்பதும் தெரிய வந்த‌து. மேலும், கஞ்சா போதையில் மயக்கமடைந்த‌தால், மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதால், சாலையோரம் இறக்கிவிட்டு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி