தமிழ்நாடு

மலேஷியாவில் இருந்து மனைவிக்கு வந்த வீடியோ - பாத்தவுடன் கதறிய குடும்பம் - அதிரும் வலைத்தளம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி சவுரியார் பட்டி அரிசனதெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்... இவர் குடும்ப வறுமையால் 1 வருடத்திற்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்... மலேசியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் எனவும் ஆசை வார்த்தை கூறி தஞ்சாவூர் துலுக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற ஏஜெண்ட் மூலம் சதீஷ் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது... ஆனால் அங்கு கூலி வேலை செய்யும் சதீஷுக்கு கடந்த 6 மாதங்களாகவே சரிவர ஊதியம் வழங்குவதில்லை என கூறப்படுகிறது... மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சதீஷ், மலேசியாவில் இருந்து தன்னை மீட்கக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக சதீஷ்குமார் மனைவி மாலதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... எப்படியாவது சதீஷ் குமாரை மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

Kolathur MLA V S Babu | Arunraj | TN Politics |கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு இப்போ எப்படி இருக்கு?

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ