தமிழ்நாடு

ஜோதிடருக்கே நேரம் சரியில்லாமல் போன சம்பவம் - இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்

தந்தி டிவி

ஜோதிடருக்கே நேரம் சரியில்லாமல் போன சம்பவம் - இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்

சென்னை துரைப்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ஜோதிடரான இவரை, 4 பேர் கொண்ட கும்பல் ஜோதிடம் பார்க்க வேண்டி அழைத்து காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை, சுந்தரமூர்த்தியே வாட்ஸ் அப் வாய்ஸ் மேசேஜ் மூலம் தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆந்திராவின், நெல்லூர் வரை தன்னை கடத்தி வந்த நால்வரும்... பின்னர் அடையாளம் தெரியாத ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என சுந்தரமூர்த்தி தெரிவித்ததாக அவரது மனைவி திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜோதிடர் சுந்தரமூர்த்தியை யாரும் காரில் கடத்தவில்லை எனவும், சிசிடிவி தரவில் அவர் தனியே நடந்து தான் செல்கிறார் எனவும் கூறியிருக்கும் நிலையில், ஜோதிடரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்