மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஓலா OLA, புதிதாக மின்சார பைக்குகளையும் அறிமுகம் செய்துள்ளது. Roadster, Roadster X, Roadster Pro என மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்குகளின் விலை, 75 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் மாடலான Roadster Pro-வை ஒருமுறை சார்ஜ் செய்தால், 579 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.