சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் இலவசமாக குளிர்சாதன பெட்டி வழங்கியுள்ளார். அங்கு பிணவறையில் சடலங்களை வைப்பதற்காக இருந்த ஒரே ஒரு குளிர்சாதனம் பெட்டியும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இலவசமாக குளிர்சாதன பெட்டி வழங்கிய ராஜேந்திரனை பொதுமக்கள் பாராட்டு வருகின்றனர்.