தமிழ்நாடு

முன்னாள் MLA-ஐ அலறவிட்ட அதிரடி ரெய்டு.. வயிற்றில் புளியை கரைத்த IT

தந்தி டிவி

ஆந்திராவின் பீமாவரம் முன்னாள் எம்எல்ஏ கிராந்தி ஸ்ரீநிவாஸ் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆந்திரா, தமிழகம்

உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அவருடைய நிறுவனம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் உதவியுடன்

சோதனை மேற்கொண்டுள்ளனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிராந்தி ஸீ ஃபுட்ஸ் எக்போர்ட்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதல் ஐந்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் இறால் மற்றும் நண்டு உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் அங்கு சோதனைகள் தொடர்கிறது. சோதனை நிறைவடைந்த பின், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிய வரும் என வருமான வரியினர் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்