தமிழ்நாடு

போலீஸ் ரோந்து பணியால் சேலத்தில் நடந்த தரமான சம்பவம்.. பார்த்ததும் விட்டு தலைதெறிக்க ஓட்டம்

தந்தி டிவி

போலீஸ் ரோந்து பணியால் சேலத்தில் நடந்த தரமான சம்பவம்.. பார்த்ததும் விட்டு தலைதெறிக்க ஓட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மர்ம நபர்கள் திருடிச் சென்ற ஆட்டை போலீசார் மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவரின் ஆட்டை இரவில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சபாபதி அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சங்ககிரியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களைக் கண்டதும் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த ஆடு, சபாபதிக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய போலீசார், அவரிடம் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்