தமிழ்நாடு

எடியூரப்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண் திடீர் மரணம்... பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பெங்களுர் சதாசிவம் நகர் காவல்நிலையத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 54 வயது பெண் ஒருவர் பாலியல் புகாரளித்தார். அந்த புகாரில், தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீத போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், புகாரளித்த பெண், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களுர் பன்னார்காட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென உயிரிழந்த அந்தப் பெண்மணிக்கு சுவாச கோளாறு இருந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் மீது புகாரளித்த பெண்ணின் திடீர் மரணம் சர்ச்சை கிளம்பிய நிலையில், காவல்துறை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு